Arulvakku

08.09.2019 — Denial for Total Commitment

23rd Sunday in Ordinary Time – 08th September 2019 — Gospel: Lk 14,25-33

Denial for Total Commitment

Jesus is amazed to see that large crowds were walking with him. He doubts whether the crowds have misunderstood his words. He turns to them and begins to explain what is involved in the choice to be his disciples. Therefore he makes three very hard requests that end with the same severe refrain: cannot by my disciple! (vv.26,27,33). It almost seems that he wants to keep people away rather than attract them. The first one is to hate the close relationships that one enjoys in this world. To hate is to have the courage to break even the most loved bonds when they are an impediment to follow Jesus. These are courageous gestures of genuine love. The second is to deny oneself by carrying one’s own cross. This is a call to bear adversities patiently, whether small or great sufferings of life. It can manifest in discrimination or physical violence as it happened with Jesus. The third is to give up everything of what one possesses. The renunciation of goods is a proposal for some heroes to commit themselves wholly for the gospel. The conditions that Jesus places are clear and are not negotiable. The demand for total commitment from denial of relationships, oneself, and one’s possession is a real challenge for everyone who wishes to follow Jesus. The impulses and the initial enthusiasm are not sufficient, constancy and strength are necessary to persevere.

பெரிய கூட்டம் தன்னைப் பின் தொடர்வதைக் கண்டு இயேசு ஆச்சரியமடைகிறார். அவருடைய வார்த்தைகளை இக்கூட்டத்தினர் தவறாகப் புரிந்து கொண்டார்களா என அவர்களை சந்தேகிக்கிறார். அவர்களிடம் திரும்பி, தம்முடைய சீடர்களாக இருப்பதற்கான தகுதி என்ன என்பதை அவர்களுக்கு விளக்கத் தொடங்குகிறார். ஆகையால், அவர் மிகவும் கடுமையான கோரிக்கைகளை முன் வைத்து “என் சீடராய் இருக்க முடியாது” என்ற பல்லவியை மும்முறை குறிப்பிட்டு முடிக்கிறார். இதனால் மக்களை தம் பக்கம் ஈர்ப்பதைவிட ஒதுக்கி வைக்கவே அவர் விரும்புகிறார் என்று தெரிகிறது. முதலாவது, ஒருவர் இந்த உலகில் அனுபவிக்கும் நெருங்கிய உறவுகளை வெறுப்பதாகும். வெறுப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் உறவுகளை உடைப்பதாகும். இது உண்மை அன்பின் துணிச்சலான அடையாளம். இரண்டாவது, தன்னை மறுத்து ஒருவரின் சொந்த சிலுவையைச் சுமப்பதாகும். வாழ்வின் சிறிய அல்லது பெரிய துன்பங்களை பொறுமையாக தாங்குவதற்கான அழைப்பு. இது இயேசுவுக்கு நடந்தது போல ஒதுக்கப்படுதலிலும் அல்லது உடல் ரீதியான வன்முறையிலும் வெளிப்படும். மூன்றாவது, ஒருவர் தாம் வைத்திருக்கும் சொத்துக்களை எல்லாம் துறப்பதாகும். பொருட்களை இழப்பது என்பது சில தூயவர்கள் நற்செய்திக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் திட்டமாகும். இயேசு முன் வைத்திருக்கும் நிபந்தனைகள் எல்லாம் தெளிவானவை; அவை வாதாடுவதற்கு உரியன அல்ல. உறவுகளை வெறுப்பது, தன்னை மறுப்பது, மற்றும் ஒருவரின் உடைமையை இழப்பது என்பது முழுமையான அர்ப்பணத்தின் கோரிக்கையாகும். இது இயேசுவை பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் ஒரு உண்மையான சவாலாகும். இவ்வழைப்பில் தொடக்ககால உற்சாகமும் தூண்டுதல்களும் போதுமானதாக இல்லை. அதில் நிலைத்திருக்க விடாமுயற்சியும் வலிமையும் அவசியம்.