Arulvakku

13.09.2019 — Lead to Save

23rd Week in Ord. Time, Friday – 13th September 2019 — Gospel: Lk 6,39-42

Lead to save

The three loosely connected sayings and metaphors have a unifying theme of leadership. Jesus now turns the responsibility to the disciples to make more disciples. As guides they become instruments of God’s judgement, and are concerned to save, not to condemn. They must attempt to guide, or teach, or take the splinter out of another’s eye with genuine love. Without this love they are acting blindly, out of touch with reality and acting on appearances. The phrase ‘blind guides’ was originally used for the Pharisees (Mt 15,14; Jn 9,41), because refusing to acknowledge their sins and the need for God, i.e., they remained blind to their reality and the mercy of God for them. Without this twofold enlightenment the disciples of Jesus remain blind and cannot guide others. Furthermore they will be condemned for their pride and hardness of heart. Unless the disciples’ perceptions are transformed and reoriented in the ways described by Jesus as in his sermon, they will remain spiritually blind and will be unable to lead others in this new way of life.

ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற மூன்று கூற்றுகளும் உருவகங்களும் தலைமைத்துவத்தை வலியுறுத்தும் கருப்பொருளாக இணைந்துள்ளன. இயேசு சீடர்களிடம் மேலும் பல சீடர்களை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக் கூறுகின்றார். வழிகாட்டிகளான அவர்கள் கடவுளின் தீர்ப்பினை சுட்டிக் காட்டும் கருவிகளாய் திகழ்கின்றனர். மேலும் அவர்கள் மற்றவர்களை கண்டனம் செய்யாமல் மீட்பதில் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் உள்ளன்போடு பிறரை வழிநடத்தவோ அல்லது கற்பிக்கவோ அல்லது பிறரின் கண்ணில் உள்ள துரும்பை எடுக்கவோ முயற்சிக்க வேண்டும். இந்த உண்மையான அன்பு இல்லையெனில் அவர்கள் கண்மூடித்தனமாக செயல்படுவார்கள்; உண்மை நிலவரத்துடன் தொடர்பு கொள்ளாமல் வெளித்தோற்றங்களைக் கண்டு செயல்படுவார்கள். “குருட்டு வழிகாட்டிகள்” என்ற சொற்றொடர் முதலில் பரிசேயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது (மத் 15,14; யோவா 9,41). ஏனெனில் தாங்கள் செய்த பாவங்களையும் கடவுளின் தேவையையும் ஒப்புக் கொள்ள மறுத்தனர். அதாவது தங்களின் உண்மை நிலவரத்திற்கும் கடவுளின் இரக்கத்திற்கும் கண்மூடி செயல்பட்டனர். இவ்விரட்டை செயல்பாடுகளில் தெளிவில்லாத இயேசுவின் சீடர்கள் பார்வையற்றவர்களாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியாதவர்களாகவும் இருப்பர். மேலும் அவர்களின் தற்பெருமைக்கும் கடின இதயத்திற்க்கும் கண்டிக்கப்படுவார்கள். இயேசுவினுடைய போதனையின்படி சீடர்களின் சிந்தனைகள் உருமாற்றமடையாமலும் வாழ்வுப்பாதை மாற்றியமைக்கப்படாமலும் இருப்பின், அவர்கள் ஆன்மீக ரீதியில் பார்வையற்றவர்களாய் இருப்பார்கள். மேலும் இயேசுவின் புதிய வாழ்க்கை முறையில் மற்றவர்களை அவர்களால் வழிநடத்த முடியாது.