Arulvakku

14.09.2019 — Lifted up in the Resurrection

Exaltation of the Holy Cross, Saturday – 14th September 2019 — Gospel: Jn 3,13-17

Lifted up in the Resurrection

Jesus humbled himself by being obedient unto death, even death on a Cross (Phil 2,8). Thus the Cross becomes the universal symbol of faith and an instrument of salvation. When Moses lifted up the bronze serpent over the people, it foreshadowed the redemption through Jesus. That Jesus saw his being ‘lifted up’ on the Cross as part of God’s providential design for salvation is specified when he says that ‘the Son of Man must be lifted up’. In choosing to accept his death, Jesus saw himself as carrying out his Father’s will (Jn 8,28-29). If Jesus’ death, i.e., being lifted up, could be described simply as God’s will, we would say that those who condemned Jesus to death and those who crucified him were carrying out God’s will. Such a conclusion is obviously wrong: For it means that it was God and not sinful human beings who willed the murder of Jesus. This imagination can only lead to a gross misunderstanding of God’s role in Jesus’ life. It was not God who crucified Jesus; it was the Jewish leaders and their subordinates. God’s part is seen in what happened at the resurrection. Sinful human beings ‘lifted up’ Jesus on the Cross. God ‘lifted up’ Jesus into his eternal embrace in the resurrection. This is clearly expressed in early sermons in the Acts of the Apostles (Acts 2,23-24; 3,13-15; 4,10; 13,28-30). Therefore, the Cross is significant not because Jesus died on it, but because through it Jesus rose from the dead. It characterizes Jesus’ sharing of our humanity, our suffering and our death. We identify with crucified Christ and become co-redeemers, sharing in his cross and become obedient followers until death.

இயேசு சாவை ஏற்கும் அளவிற்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார் (பிலி 2,8). இவ்வாறு சிலுவை நம்பிக்கையின் உலகளாவிய அடையாளமாகவும் மீட்பின் கருவியாகவும் மாறியது. வெண்கல பாம்பை மக்கள் மீது மோசே உயர்த்தியது, இயேசுவின் மூலம் வெளிப்படும் மீட்பை முன்னறிவித்தது. இயேசு தம்மையே சிலுவையில் “உயர்த்தப்படுவதை” மீட்புக்கான கடவுளின் உன்னத திட்டம் என்று கண்டார்.  இதனை “மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்திக் குறிப்பிடுகிறார். தனது மரணத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்ததில், இயேசு இறைத்தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதாகக் கண்டார். இயேசு உயர்த்தப்படுதலை வெறுமனே கடவளின் திட்டம் என்று விவரித்தோம்; எனில், இயேசுவை மரணத்திற்கு கண்டனம் செய்தவர்களும் அவரை சிலுவையில் அறைந்தவர்களும் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று நாம் கூறலாம். அத்தகைய முடிவு வெளிப்டையாகவே தவறானது: காரணம், இயேசுவை கொலை செய்ய ஆதரித்தவர் கடவுளே அன்றி, பாவிகளாகிய மனிதர்கள் அல்ல. இக்கற்பனை இயேசுவின் வாழ்க்கையில் கடவுளின் பங்கைப் பற்றி தவறாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். இயேசுவை சிலுவையில் அறைந்தது கடவுள் அல்ல, மாறாக யூதத் தலைவர்களும் அவர்களுடன் துணை நின்ற அதிகாரிகளும் தான். கடவுளின் பங்கு உயிர்தெழுதலில் என்ன நடந்தது என்பதில் தெளிவாக்கப்படுகிறது. பாவிகளாகிய மனிதர்கள் சிலுவையில் இயேசுவை உயர்த்தினர். உயிர்ப்பு என்னும் நித்திய அரவணைப்பில் இயேசுவை கடவள் “உயர்த்தினார்.” திருத்தூதர் பணிகளின் நூலில் காணப்படும் போதனைகளில் இது இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது (திப 2,23-24; 3,13-15, 4,10, 13,28-30). ஆகையால், இயேசு இறந்ததால் சிலுவை முக்கியம் பெறவில்லை; மாறாக இறந்தோரிடமிருந்து உயிர்தெழுந்ததால் முக்கியமானது. இது இயேசு நம் மனிதத்திலும் துன்பத்திலும் மரணத்திலும் பங்குகொள்வதை குணாதிசயமாக காட்டுகிறது. இவ்வாறு நாம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில் ஒன்றிணைந்து மீட்பர்களாகிறோம். அவருடைய சிலுவையை பகிர்ந்து கொண்டு இறக்கும் வரை கீழ்ப்படிதலுள்ள சீடர்களாக மாறுகிறோம்.