Arulvakku

15.09.2019 — Father’s tenderness

24thOrdinary Sunday – 15thSeptember 2019 — Gospel: Lk 15,1-32

Father’s tenderness

The three parables, (the lost sheep, the lost coin, the lost son and brother) share a common theme: loss, found and celebration (vv.6&9; vv.7&10; vv.24&32). The first two parables are well written, with a careful parallelism of wording substantially telling the same story or subject-matter, but also with stylistic variations. These twin parables are given identical interpretation but both are introduced with a formula ‘this parable … or…” that denotes them as a single parable. The third parable describes with touching simplicity what God is like, his goodness, his grace, his boundless mercy, and the abounding love. While the father may be referred to an image of God, the picture is blurred when God is referred to in the parable alongside but in distinction from the father, in “Father, I have sinned against heaven and before you” (v.18,21; Ex 10,16). However the father’s behaviour towards both the sons indicates the respect of God for the choices of men. He exhorts, educates, advises, accompanies, but always leaves freedom also to make mistakes. In his house God does not want slaves, but free people; he does not want servants but children (Jn 15,15). In the parable, the younger son uses five times the word ‘father’ because of him the father is really a “Father”. He knows he cannot make claims in his regard, is convinced to have received all free, not deserving anything. Instead, on the lips of the eldest son the word “father” never appears. He shows of being not a son but, a servant; the father for him is only a master. The consequence of this wrong relationship with the father is the refusal of the brother who is called: “this son of yours” (v.30). However, immediately the father, with great delicacy corrects him: “this brother of yours…” (v.32). The father always received with tenderness both: the younger son who stays inside and outside, and the older brother who lives with contempt and arrogance.

இழந்த ஆடு, இழந்த நாணயம், இழந்த மகன் மற்றும் சகோதரர் என்ற மூன்று உவமைகள் ஒரு பொதுவான கருப்பொருளைப் பகிர்ந்து கொள்கின்றன: இழத்தல், கண்டுபிடித்தல் மற்றும் கொண்டாடப்படுதல். முதல் இரண்டு உவமைகளும் இணைச்சொற்களால் கவனத்துடன் நன்கு எழுதப்பட்டுள்ளன. வர்ணனையில் மையப்பொருள் மாறியிருந்தாலும் ஒரே கதையையோ அல்லது விடயத்தையோ கணிசமாகக் கூறுகின்றன. இந்த இரட்டை உவமைகளுக்கு ஒரே மாதிரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு உவமைகளுக்குத் தொடக்கமாக “இந்த உவமையைச் சொன்னார் …” என்ற ஒற்றைத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மூன்றாவது உவமை கடவுள் எப்படிப்பட்ட எளிமையானவர் என்று விவரிக்கிறது. அவருடைய நன்மைத்தனம், அருளாசீர், எல்லையற்ற கருணை, மற்றும் ஏராளமான அன்பு ஆகியவற்றை வர்ணிக்கிறது. உவமையில் வரும் தந்தையை கடவுளின் உருவமாகக் குறிப்பிடலாம் என்றாலும், அவரை கடவுளிடமிருந்து வேறுபடுத்துவது, “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்” (லூக் 15,18&21; விப 10,16) என்ற கூற்றில் மிக மங்கலாக தெரிகிறது. இருப்பினும் இரு மகன்களிடமும் தந்தை நடந்து கொள்ளும் விதம் கடவுள் மனிதர்களுக்கு தரும் மரியாதையை தெளிவாகக் காட்டுகிறது. அவர் ஊக்கமூட்டுகிறார், அறிவுறுத்துகிறார், பாடம் கற்பிக்கிறார், உடனிருக்கிறார்; ஆனால் அவர்கள் எப்போதும் தவறு செய்ய முழுச் சுதந்திரத்தையும் அளிக்கிறார். கடவுள் அவருடைய வீட்டில் அடிமைகளை விரும்பவில்லை, மாறாக சுதந்திரமான மக்களை விரும்புகிறார். அவர் பணியாளர்களாக அல்ல குழந்தைகளாக வாழ அழைக்கின்றார் (யோவா 15,15). இவ்வுவமையில் இளைய மகன் “தந்தை” என்ற வார்த்தையை ஐந்து முறை பயன்படுத்துகிறார். ஏனெனில் அவரை உண்மையான “தந்தையாக” பார்க்கின்றார். மேலும் அவருடைய சொத்தில் உரிமை கோர முடியாது என்பதை அறிந்திருந்தார். எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்றதால் எதற்கும் தகுதியற்றவர் என்பதில் உறுதியாக இருந்தார். மாறாக, மூத்த மகனின் உதட்டில் “தந்தை” என்ற சொல் ஒரு போதும் வரவில்லை. தான் ஒரு மகன் அல்ல, ஒரு வேலைக்காரன் என்பதையே காட்டுகிறார். அவனுடைய தந்தையை ஒரு எசமானராக மட்டுமே உணர்கின்றார். தந்தையுடனான இந்த தவறான உறவின் விளைவு “இந்த உம் மகன்” (15,30) என்று சகோதர உறவினை மறுக்கிறார். இருப்பினும் தந்தை உடனடியாக “உன் தம்பி இவன்” (15,32) என்ற சகோதர உறவுடன் அவரைத் திருத்துகிறார். இளையமகன் உடனிருக்கும் போதும், தந்தையை விட்டு வெளியேறிய போதும்; மூத்த சகோதரன் தந்தையை ஆணவத்துடன் அவமதித்தபோதும் அவர்களின் தந்தை எப்பொழுதும் மென்மையானவராய் திகழ்கின்றார்.