Arulvakku

16.09.2019 — Model of team spirit

24th Week in Ord. Time, Monday – 16th September 2019 — Gospel: Lk 7,1-10

Model of team spirit

Jesus and the Centurion, Centurion’s slave and Jesus, never meet in this fascinating healing story. However, based on the hear-say knowledge about Jesus and his workings, the Centurion, the Roman official directs two delegations to meet Jesus. The first mediation through Jewish elders (7,3) does not speak about the actual request of the Gentile Centurion. Instead they make the Centurion worthy by stating that he is a friend of the Jews and has built a synagogue for them. In the second delegation, his friends (7,6) emphasize the conscious unworthiness of the Centurion to receive Jesus into his house, even though he had earlier invited him to come. Through these intermediaries the Centurion reveals his interior attitudes and character: values highly his slave; manifests favourable attitude towards Jews; expresses sense of unworthiness towards Jesus; acknowledges the authority of Jesus; and places unbounded trust in Jesus. An essential feature of inspirational motivation that dominates in him is his animating team spirit and seeking extended collaboration. As a man-in-charge of hundred men, he explained plainly to Jesus how he organized among his subordinates their skills. Now in order to achieve his vision of getting healing for his slave, he sought the extended collaboration of his mediators. For this Jesus expresses his amazement and holds him as a model of faith.

ஆச்சரியமான குணப்படுத்தும் இந்த வர்ணனையில் இயேசுவும் நூற்றுவர்தலைவனும், நூற்றுவர்தலைவனின் பணியாளரும் இயேசுவும் ஒரு போதும் சந்தித்துக் கொள்ளவில்லை. இருப்பினும் இயேசுவைப் பற்றியும் அவருடைய செயல்கள் பற்றியும் செவி வழியே அறிந்து கொண்ட உரோமை அதிகாரியான நூற்றுவர்தலைவன் இயேசுவைச் சந்திக்க இரண்டு பிரதிநிதிகளை அனுப்புகிறார். முதல் பிரதிநிதிகளான யூதர்களின் மூப்பர்கள் புறவினத்தாரான நூற்றுவர்தலைவனின் கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதற்கு பதிலாக யூதர்களின் நண்பர் என்றும், அவர்களுக்கு ஒரு தொழுகைக் கூடத்தைக் கட்டியுள்ளார் என்றும் கூறி அவர்கள் நூற்றுவர்தலைவனை தகுதியுடையவராக வெளிப்படுத்துகிறார்கள். இரண்டாவது குழுவினரான அவருடைய நண்பர்கள் இயேசுவை தனது வீட்டிற்குள் வரவேற்க நூற்றுவர்தலைவன் தகுதியற்றவன் என்பதை வலியுறுத்துகிறார்கள். இந்த இடைநிலையாளர்களின் மூலம் நூற்றுவர்தலைவனின் மனப்பான்மையையும் குணநலத்தினையும் அறிந்து கொள்ளலாம்: அவரது பணியாளரை மிகவும் மதிக்கிறார்;; யூதர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்;; இயேசுவின் முன் தகுதியற்ற உணர்வை வெளிப்படுத்துகிறார்;; இயேசுவின் அதிகாரத்தை ஒப்புக்கொள்கிறார்; இயேசுவின் மீது அளவுகடந்த நம்பிக்கையை வைக்கிறார். மேலும் அவரிடம் மிளரும் முக்கிய பண்புகளாவன: குழு உணர்வுடன் இணைந்து செயல்படுவது மற்றும் பிறரின் ஒத்துழைப்பை நாடுவது. நூறு பணியாளர்களுக்கு பொறுப்பாளரான அவர் இயேசுவிடம் தனது பணியாளர்களை அவரவரின் திறமைக்கு ஏற்ப எவ்வாறு ஒழுங்கமைத்தார் என்பதை தெளிவாக விளக்கினார். தற்போது அவரின் இலட்சியமான, உடல்நலமற்ற பணியாளர் நலம் அடைவதற்காக தன்னுடன் இருக்கும் இடைநிலையாளர்களின் ஒத்துழைப்பை நாடினார். இதனைக் கண்டுணர்ந்த இயேசு தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்; மேலும் அவரை நம்பிக்கையின் முன் அடையாளமாக சுட்டிக்காட்டினார்.