Arulvakku

13.10.2019 — From Healing to Salvation

28th Ordinary Sunday – 13th October 2019 — Gospel: Lk 17,11-19

From Healing to Salvation 

If the Samaritan leper is taken as a model of gratitude, than today’s Gospel is often reduced to a lesson on social etiquette, to remember to say thank you to those who help. In this way, the scene with which the story concludes – a group of discourteous persons and an unhappy Jesus – communicates sorrow more than joy. Instead Jesus remains surprised: a Samaritan – a heretic, a non-believer – had a theological insight, which the nine Jews, considered themselves as heirs, educated in the faith and knowledge of the Scriptures, did not have. It is not that God needs or looks for our praise. Instead thanksgiving is a “gift” of ourselves to God. It is an awareness that floods our hearts with peace for today and strength for tomorrow.

In Jesus time, four categories of persons were treated as dead: the poor, the leper, the blind and the childless. All diseases were considered as punishment for sins but leprosy was the symbol of sin itself. Thus the ten lepers felt rejected by all: by the people and by God. Leprosy puts together Jews and Samaritans. The awareness of common disgrace and suffering gathers them in friendship and solidarity. They were aware that Jesus was a healer. Due to social rejection, they stood from afar and requested aloud to Jesus, not healing but only compassion. Instead, Jesus told them to ‘present themselves to the priests’. The ten lepers were cured as they were going along the way. The speciality in this miracle is that the healing did not happen immediately. The nine lepers go to the priest because they wanted to fulfill the law. The Samaritan turns back to Jesus, because he cannot go to the priest for they would not minister to him. He was regarded as a lawless sinner because he does not belong to the right religion.

The ten lepers were cured of their diseases but only one of them was saved (17,19). He was the one who responded straight from the heart; while the others were concerned about fulfilling the legal requirements. The Samaritan understood that Jesus was more than a healer, so he fell on his knees and gave glory to God. He only thought about giving thanks to God right where the grace of God found him: such is the faith which saves and transforms. He, the heretic, who did not believe in the prophets, had surprisingly intuited that God has sent in him the Messiah, whom the prophets announced: He opens the eyes of the blind, the deaf hear, the lame walk, the dead are raised to life and the lepers are made clean (Lk 7,22). He is the first to truly grasp that God is not far from the lepers and God’s salvation includes everyone, even the marginalized. The evangelist Luke emphasizes that God’s word announced ‘from a distance’ solves desperate situations and its efficacy remains intact for all times. He affirms boldly that God’s salvation comes to anyone who approaches Christ personally.

சமாரிய தொழுநோயாளரை நன்றியுணர்வின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால், இன்றைய நற்செய்தி ஒரு நல்லொழுக்கப் பாடமாக குறைக்கப்பட்டுவிடும். அதாவது, உதவி செய்பவர்களுக்கு நன்றி சொல்ல நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில் இக்கதையின் இறுதிக்காட்சி- நன்றியுணர்வற்ற நபர்கள் மற்றும் வருத்தப்படும் இயேசுவை சுட்டிக் காட்டி, மகிழ்ச்சியை விட துக்கத்தை அதிகமாக கோடிட்டுக் காட்டுகிறது. அதற்கு பதிலாக இயேசு, நம்பிக்கையற்ற, மதச்சார்பற்ற, சமாரியன் ஒருவனின் இறையியல் நுண்ணறிவை கண்டு தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். மறைநூலின் நம்பிக்கையிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய இசுரயேலின் வாரிசுகளான ஒன்பது யூதர்களிடம் இவ்வறிவு காணப்படவில்லை. கடவுளுக்கு நம்முடைய புகழ் தேவை அல்லது தேடுகிறார் என்பதல்ல. அதற்கு பதிலாக நன்றி செலுத்துவது என்பது கடவுளுக்கு நம்மையே கொடையாகத் தருவதாகும். இது ஒரு விழிப்புணர்வு நிலையாகும். இதில் நம் இதயங்கள் அன்பினால் நனைவதால் இன்றைக்கான மனஅமைதியும் நாளைக்கான முழுபலத்தையும் பெற்றுக் கொள்கிறோம்.

இயேசுவின் காலத்தில் ஏழை, தொழுநோயாளர், பார்வையற்றோர் மற்றும் மகவுகள் அற்றோர் என்ற நான்கு வகையினரை இறந்தவர்களாகக் கருதினர். எல்லா நோய்களும் பாவத்தின் தண்டனையாகக் கருதப்பட்டன. ஆனால் தொழுநோய் மட்டும் பாவத்தின் அடையாளமாக நிலவியது. இவ்வாறு பத்து தொழுநோயாளிகள்- மக்களாலும், கடவுளாலும்- அதாவது அனைவராலும் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தனர். இங்கு தொழுநோய் யூதர்களையும் சமாரியர்களையும் ஒன்றிணைக்கிறது. பொதுவான அவமானம் மற்றும் துன்பம் பற்றிய விழிப்புணர்வு அவர்களை நட்புறவிலும் ஒற்றுமையிலும் கூட்டிச் சேர்க்கிறது. இயேசு குணமளிப்பவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சமூக நிராகரிப்பினால் அவர்கள் தூரத்தில் நின்று கொண்டு, உரத்த குரலில், தங்களுக்கு குணப்படுத்துதலை அல்ல, மாறாக இரக்கத்தை இயேசுவிடம் இறைஞ்சினார்கள். அதற்கு பதிலாக, அவர்களை “குருக்களிடம் காண்பிக்க” கேட்டுக் கொண்டார் இயேசு. பத்து தொழுநோயாளிகளும் செல்லும் வழியில் குணமடைந்தனர். இந்த குணமளித்தலின் சிறப்பு என்னவென்றால், உடனடியாக அவர்கள் நலம் பெறவில்லை, படிப்படியாக அது நடைபெற்றது. ஒன்பது தொழுநோயாளிகளும் தங்களுடைய சட்டத்தை நிறைவேற்ற விரும்பியதால் குருக்களிடம் சென்றார்கள். சமாரியன் ஒருவன் மட்டும் இயேசுவிடம் திரும்பிச் சென்றார். ஏனென்றால் குருக்கள் அவருக்கு ஊழியம் செய்ய மாட்டார்கள். யூத மதத்தைச் சாராதவர் என்பதால் அவர் சட்டவிரோதமான பாவியாக கருதப்பட்டார். பத்து தொழுநோயாளிகள் தங்கள் நோயிலிருந்து குணம் பெற்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார் (லூக் 17,19). இவர் ஒருவர் மட்டும் இதயத்திலிருந்து பதிலளித்தார். மற்றவர்கள் சட்டப்பூர்வ தேவைகளை நிறைவு செய்வதில் அக்கறை கொண்டிருந்தனர். இயேசு மருத்துவரை விட சிறந்தவர் என்பதை சமாரியன் புரிந்து கொண்டதால், அவர் முன் விழுந்து முழந்தாள்படியிட்டு கடவுளை மகிமைப்படுத்தினார். இறையருள் கிடைத்த இடத்திலேயே கடவுளுக்கு நன்றி செலுத்த நினைத்தார். நம்பிக்கை மீட்பையும் உருமாற்றத்தையும் இவரில் கொணர்ந்தது. இதனால், இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்ளாத மதசார்பற்ற இவர், இறைவாக்கினர்கள் முன்னறிவித்த கடவுள் அனுப்பிய மெசியா இவர் தான் என்று அறிந்து கொண்டார். இவரினால் பார்வையற்றோர் பார்வையடைகின்றனர், காது கேளாதோர் கேட்கின்றனர், முடவர் நடக்கின்றனர், இறந்தோர் உயிர்த்தெழுப்பப்படுகின்றனர், மற்றும் தொழுநோயாளர் நலமடைகின்றனர் (லூக் 7,22) என்பதை கண்டுணர்ந்தார். கடவுள் தொழுநோயாளரிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும், கடவுளின் மீட்பு ஒதுக்கப்பட்டோர் அனைவரையும் உள்ளடக்கியது என்பதையும் அவர் உண்மையில் புரிந்து கொண்டார். “தொலைவில்” இருந்து அறிவிக்கப்படும் இறைவார்த்தை அவநம்பிக்கையான சூழ்நிலையை தீர்க்கிறது என்றும், அதன் செயல்திறன் எல்லா நேரங்களிலும் அப்படியே நிலைத்திருக்கும் என்றும் நற்செய்தியாளர் லூக்கா வலியுறுத்துகிறார். மேலும், கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அணுகும் யாவருக்கும் கடவுளின் மீட்பு உறுதியாக கிடைக்கும் என்று தைரியமாக எடுத்துக் கூறுகிறார்.