Arulvakku

15.10.2019 — Giving over Observing

28th Week in Ord. Time, Tuesday – 15th October 2019 — Gospel: Lk 11,37-41

Giving over Observing

It surprises that Jesus accepted the Pharisee’s dinner invitation. For we know, the Pharisees have always disagreed many of the things that He was saying and doing. In this situation of hospitality, Jesus is no comfortable guest, for he was carefully observed to see if he met all the requirements of the law. His failure to wash before dinner causes his host to be amazed. The ceremonial washing of hands was well grounded in Jewish scripture and tradition (Gen 18,4; Judg 19,21; Mk 7,1-9), although the biblical mandate applied only to priests (Ex 30,19-21; 40,12). The Pharisees had extended this tradition to all persons, not just priests, and as a preparation for eating all food, not just holy offerings. In this situation He targets their practices that offend against deeper moral values, such as justice and charity, greed and wickedness. Cleansing of material objects such as cups and dishes best serve as occasions to demonstrate the Father’s priority of giving over observing.

பரிசேயரின் விருந்திற்கான அழைப்பை இயேசு ஏற்றுக் கொண்டது சற்று ஆச்சரியமாக உள்ளது. பல விடயங்களில் பரிசேயர்கள் அவர் சொல்வதையும் செய்வதையும் எப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நமக்குத் தெரிந்ததே. விருந்தோம்பலைப் பெறும் இச்சூழ்நிலையில், இயேசு ஏற்றுக் கொள்ளப்பட்ட விருந்தினர் அல்ல; ஏனென்றால் அவர் சட்டத்தின் அனைத்து தேவைகளையும் கடைபிடிக்கிறாரா என்று கவனமாக அவர்கள் உற்று நோக்கினர். விருந்திற்கு முன் அவர் கைகழுவத் தவறியது விருந்தளிப்பவரை வியப்பில் ஆழ்த்தியது. யூத மறையிலும் பாரம்பரியத்திலும் கைகழுவும் சடங்குகள் நல்ல அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன (தொநூ 18,4; நீதிதலை 19,21; மாற் 7,1-9). இருப்பினும் இவ்விவிலிய கட்;டளை குருக்களுக்கு மட்டுமே பொருந்தும் (விப 30,19-21; 40,12). பரிசேயர்கள் இந்த பாரம்பரியத்தை குருக்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் என்றும்; அர்ப்பணிக்கப்பட்ட உணவிற்கு மட்டுமல்ல, எல்லா உணவு உண்பதற்கு முன் தயாரிப்பாகவும் இச்சடங்கை விரிவிபடுத்தியிருந்தனர். இந்த சூழ்நிலையில் ஆழ்ந்த அறநெறி விழுமியங்களுக்கு எதிராக, அதாவது நீதி மற்றும் தர்மம், பேராசை மற்றும் கெட்ட எண்ணம் போன்ற புண்படுத்தும் அவர்களின் செயல்முறைகளை அவர் சாடுகின்றார். வெளிப்புறத்தில் சுத்தப்படுத்தப்படும் கோப்பைகள் மற்றும் பாத்திரங்களை இச்சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி, சட்டங்களை நுணுக்கமாக கடைபிடிப்பதை விட, தர்மம் செய்வதே இறைத்தந்தையின் முன்னுரிமை என்று அழுத்தமாக நிரூபிக்கின்றார்.