Arulvakku

17.10.2019 — Key of God’s knowledge

28th Week in Ord. Time, Thursday – 17thOctober 2019 — Gospel: Lk 11,47-54

Key of God’s knowledge

Jesus accuses the Pharisees of “taking away the key of knowledge”. It is a key that unlocks the meaning of the Scripture, brings men to the knowledge of God and grants entrance into His Kingdom. Jesus not only blamed them for not attaining any wisdom, but of their teaching that prevented others from knowing the truth. As experts of the law, the Pharisees were holding the right to the interpretation of the Scriptures. Due to this, they closed their minds to God’s word and replaced it with their own ideas. Instead of enlightening the people with the Scripture, they kept its knowledge locked in strict regulations and obscurities. Although the wisdom of God was in their midst, yet they could not perceive Jesus as their Lord. He taught them that the knowledge of Scripture and entrance to the kingdom are interconnected. But they sought to destroy him rather than to embrace his teaching and example. By rejecting him, who is the “door” to all wisdom and knowledge of God, the Pharisees closed themselves and to the work of God that transforms all men. In this way, they remained as hindrance to the flow of God’s knowledge and of gaining His kingdom.

“அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்” என்று பரிசேயர்களைச் சாடுகின்றார் இயேசு. இத்திறவுகோல் மறைநூலின் அர்த்தங்களைத் திறக்கும், மனிதர்களை இறையறிவுக்குக் கொண்டு சேர்க்கும், இறையரசில் நுழைவதற்கு வழிவகுக்கும். பரிசேயர்கள் எந்தவொரு ஞானத்தையும் அடையவில்லை என்பதற்காக மட்டுமல்லாமல், அவர்களின் போதனைகள் மூலம் மற்றவர்கள் உண்மையை அறிந்து கொள்ளத் தடையாய் இருந்ததற்காகவும் அவர்களைக் குற்றம் சாட்டுகின்றார். சட்ட வல்லுநர்களான அவர்கள், மறைநூலை விளக்கும் உரிமையைக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் இறைவார்த்தைக்குத் தங்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டார்கள். மாறாக தங்கள் சொந்த கருத்துக்கள் மூலம் அவற்றிக்கு விளக்கம் அளித்து வந்தனர். மக்களுக்கு இறைவார்த்தையை கொண்டு அறிவூட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் அறிவை கடுமையான விதிமுறைகளாலும் குழப்பங்களாலும் மழுங்கடித்து வைத்திருந்தார்கள். இவ்வாறு இறைஞானம் அவர்கள் மத்தியில் இருந்த போதிலும், அவர்களால் இயேசுவை தங்கள் மெசியா என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மறைநூலைப் பற்றிய அறிவும், இறையாட்சிக்குள் நுழைவதும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். ஆனால் அவருடைய போதனையையும் முன்மாதிரியையும் ஏற்றுக் கொள்ளாமல் அவரை அழிக்கவே முற்பட்டார்கள். கடவுளின் ஞானத்திற்கும் அறிவிற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் இயேசுவை அவர்கள் நிராகரிப்பதன் மூலம், பரிசேயர்கள் தங்களுக்கும் மற்றும் எல்லா மானிடருக்கும் மாற்றத்தினை வழங்கும் இறையருளை பெறத்தடையாக இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் இறையறிவின் ஊற்றுக்கும் இறையாட்சியில் புகுவதற்கும் தடையாகவே செயல்பட்டு வந்தார்கள்.